Book Store Online : Buy Books Online at Best Prices in India | Books Shopping @ vaigaraibooks.com

Book Published 2013

Sofas
 1. சிரிப்போம் சிந்திப்போம்!

  .20.00

  No.of.Pages.56

  Size.Crown (Reprint)

  Author.முனைவர். மி. நோயல்

  Size:Crown (Reprint)

  நம்முடைய சமூகத்தில் பல வகையான நம்பிக்கைகளும், மூடப் பழக்கவழக்கங்களும் பரவிக் கிடக்கின்றன. இந்தப் பழக்கவழக்கங்களை எல்லாம் கொஞ்சம் நகைச்சுவையோடு அலசிப் பார்த்துச் சிந்திக்கத் தூண்டுகிறது இந்நூல்.

 1. என் இயேசு அனுபவம்

  .30

  No.of.Pages.80

  Size.Demi

  Author.அருட்திரு. X. சவரிமுத்து, சே.ச.

  Size:Demi

  இந்நூல்….. "நற்செய்தி அறிவிக்க... வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன" (எசா 52:7) என்ற பேருண்மையை ஒரு கால்பந்தாட்ட வீரரின் கால்கள் கண்டுகொண்டால் என்ன நடக்கும்? அவை எந்தத் திசையை நோக்கித் திரும்பும் ? அந்த எதிர்பாராதத் திருப்பம்தான் என் இயேசு அனுபவம் ! தன் இயேசு அனுபவத்தோடு இணைத்து கத்தோலிக்கத் திருமறையின் ஒரு சில கோட்பாடுகளை மக்களோடு பணியாற்றிய அனுபவத்திலிருந்து எளியவர்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் விளக்கியிருக்கிறார் என்பது இந்நூலின் கூடுதல் சிறப்பு

 1. தவக்காலச் சிந்தனைகள்

  .50

  No.of.Pages.112

  Size.Demi

  Author.தம்புராஜ், சே.ச.

  Size:Demi

  இயேசுவின் உடலை உழுத ஆயுதங்கள், அவரைப் பிழிந்தபோது சிந்திய குருதித் துளிகள், அவர்மீது வீசப்பட்ட சொல்லம்புகள், அன்னையின் இதயத்தைத் துளைத்த வாள்கள், அந்தத் துயரத்தின் உச்சியிலும் அவர் உதிர்த்த முத்துகள் என்று ஒவ்வொரு பரிமாணமும் நமக்கு தவக்காலச் சிந்தனைகளாகக் கிடைத்திருக்கின்றன.வாழ்நாளெல்லாம் இறைவனை அப்பா என்றழைத்த இயேசு, சிலுவையின் உச்சியில் நின்று கதறும்போது அப்பா என்ற சொல் மறந்து, இறைவா என்று கதறியது ஏன் ? இதுபோன்ற பல ஏன் களுக்கு ஆன்மிகப் பார்வையோடும் தவக்காலப் பொருளோடும் விடையளிக்கிறது இந்நூல்.

 1. நம்பிக்கை வாழ்வாக. . . .

  .35

  No.of.Pages.72

  Size.Crown

  Author.அ. மைக்கேல் ராஜ் & ம. டைட்டஸ் மோகன்

  Size:Crown

  வானம் பொய்த்துப்போய் நிலம் வறண்டு பாலையாய்க் காட்சியளிக்கிறபோது தன்னந்தனியாக அசைந்தாடும் ஒரு தளிர், இந்த மண்ணில் ஈரமும் மனதில் நம்பிக்கையும் மிச்சம் இருப்பதைச் சுட்டிக்காட்டுவது, வெறும் அழகல்ல, அதியசம் ! இந்த அதிசயத்தை அன்றாட வாழ்வில் அனுபவிக்க, புதைந்துகிடக்கும் நம்பிக்கை விதைகளைத் தளிர்க்கச் செய்ய, திருஅவை நமக்குத் தந்த பசுமையான வாய்ப்புதான் இந்த இறைநம்பிக்கை ஆண்டு ! இதன் பல்வேறு பரிமாணங்களை இந்நூலில் எடுத்தியம்புகிறது.

 1. செயலறம்

  .50

  No.of.Pages.128

  Size.Demi

  Author.மாற்கு

  Size:Demi

  செயலறம் என்பது என்ன? அடிப்படையில், அறம் என்பதை ஒரு நெறிமுறையாக, விழுமியமாகக் கொள்ளலாம். இயேசுவின் பணிவாழ்வுக்கு இறையாட்சிக்கான வழிமுறையே அறம் எனலாம். அவரது அனைத்துச் செயல்களுக்கும் இந்த அறமே உரைகல்லாகத் திகழ்ந்திருக்கிறது. இயேசுவின் இந்த அறம் நாட்டுக்கு நாடு, இனத்திற்கு இனம், சூழலுக்குச் சூழல் மனுவுருவெடுக்கும் என்பதை நாம் அறிவோம். இந்த அறம் நம் தமிழக மண்ணில், தமிழக சமூக, அரசியல், பொருளியல், பண்பாட்டுச் சூழலில் எப்படி மனுவுருவெடுக்க வேண்டும் என்பதை மக்கள் அனுபவத்திலிருந்தும், களப்பணியிலிருந்தும் சிந்தனைகளை முன்வைக்கிறது இந்நூல்.

 1. முற்றுப்புள்ளியிலிருந்து…. . . . (பெண் விடுதலைக்கானப் படை)

  .40

  No.of.Pages.96

  Size.Demi

  Author.கவிஞர். விஜய லட்சுமி, திருமிகு. கு. ஆக்னஸ் குளோரி, அருள்பண - See more at: http://www.vaigaraibooks.com/bp2013-6orginal.html#sthash.bm50LYll.dpuf

  Size:Demi

  முடக்கிப்போடுவதற்கென்றே சமூகம் உருவாக்கும் முற்றுப்புள்ளிகளைப் பகுத்தாய்ந்து பட்டியலிடுகிறது இந்நூல்!@ பெரும்புள்ளி களாய் உருவெடுத்திருக்கும் ஆணாதிக்கத்துக்குள் இனி பெண்ணினம் அடங்காது என்றும் எச்சரிக்கிறது. முற்றுப்புள்ளியை நீட்டினால் முழுநீளக் கோடாக்கவும் முடியும், அதை முறித்துப்போட்டால் பிறைநிலவாக்கவும் முடியும் என்று முற்றுப்புள்ளியிலிருந்து முளைத்தெழுகின்ற நம்பிக்கையை விதைக்கின்றன அனுபவப்பூர்மான சிந்தனைகள் !

 1. விவிலிய வாசிப்பில் சமூக சமய அக்கறை

  .60

  No.of.Pages.128

  Size.Demi

  Author.முனைவர் அருள்பணி. ஹ. ஜான் பாப்டிஸ்ட்

  Size:Demi

  இறைவார்த்தை உயிருள்ளது என்ற கூற்று வரலாறு நெடுக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விவிலியம் ஒரு வழிபடு பொருளாக மட்டும் இருந்தால் அதன் உயிரோட்டத்தை உணர இயலாது. அது வாழ்வாக்கப்படும்போதுதான் அதன் சீரிளமைத் துடிப்பு வெளிப்படுகிறது. இந்த அடிப்படையான புரிந்துணர்வோடு விவிலிய வாசிப்புக்கான பல பரிமாணங்களை எளிமையாக முன்வைக்கிறது இந்நூல்., விவிலியத்தின்அடிப்படை இலக்கும் நோக்கும் மாறாமல் அடித்தட்டுப் பார்வையில் சமூக சமய அக்கறையோடு இன்றையச் சூழலுக்கேற்ப அதைப் பொருள்கொள்ள அழைப்பு விடுக்கிறது இந்நூல்

 1. பள்ளிப்பேரவை! (ஒரு பயிற்சிப் பாசறை)

  .60

  No.of.Pages.No stock

  Size.Demi

  Author.கே. ஏ. அகஸ்தீன், சே.ச.

  Size:Demi

  பள்ளிப்பேரவை என்பது பள்ளியில் நிகழ்த்தப்படும் வாராந்திரச் சடங்கு அல்ல. எதிர்காலத்திற்கான பொறுப்புள்ள குடிமக்களைப் புடமிடும் பயிற்சிப் பாசறையாக அது மாற வேண்டும். இந்த நல்லெண்ணத்தில் மதிப்பீடுகளை முன்னிறுத்தி, சமய நல்லிணக்கத்தை மனதில்கொண்டு, பயன்பாட்டுக்கு உரிய வண்ணம், தனது நீண்டகால ஆசிரியப் பணி அனுபவத்திலிருந்து இந்தக் கையேட்டைத் தந்திருக்கிறார் நூலாசிரியர் அவர்கள்

 1. இலட்சிய மொழிகள் ! (வழிகாட்டிய சான்றோர்களின் பொன்மொழிகள்)

  .25

  No.of.Pages.64

  Size.Crown

  Author.மு. தமிழ்ச்செல்வன்

  Size:Crown

  ஒவ்வொரு பொன்மொழிக்கும் பின்னால், ஒரு வரலாறோ, வலியோ, காயமோ, வடுவோ, பாடமோ அமைந்திருக்கும். ஞானக் குளியல்போட்டு மிளிர்வதே இதன் சிறப்பு. மாமனிதர்கள் மூழ்கி எடுத்த விலைமதிப்பற்ற முத்துகள் அவை ! இன்றைய தலைமுறையை நெறிப்படுத்த நேற்றைய தலைமுறையின் திசைகாட்டி என்றும் இவற்றைச் சொல்லலாம். அந்தரத்தில் கட்டப்பட்ட கயிறின் மேல் நடப்பதுபோன்று சில சமயங்களில் வாழ்க்கை தோன்றலாம். தடுமாறாமல், அந்தக் கயிறிலும் தடம் பதிக்க வழிகாட்டும் பொன்மொழிகளை இலட்சிய மொழிகள் என்று சொல்வது எத்துணைப் பொருத்தம் !

 1. தடங்கலுக்கு மகிழ்கிறோம்

  .60

  No.of.Pages.128

  Size.Demi

  Author.தினகரன்

  Size:Demi

  வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற தடங்கலுக்கெல்லாம் வருந்தி, அழுது, கண்ணீர் சிந்தி உடைந்துபோகிற சூழலில், தடங்கல் தடங்களாகவும் மாறலாம் என்பது புதிய கோணம் ! இந்தப் புதிய கோணம் இந்நூலின் ஒரு சோற்றுப் பதம் எனலாம். தடங்கலுக்கு மகிழ்வது போன்று. . . உயர்திணைப் பண்புகளுடன் அஃறிணை, சந்திக்காத பார்வை, நீரற்ற நிரம்பிய குளம், வழங்கும் வறுமை, கோழியை மிதித்த குஞ்சுகள், இரவு நேரத்துச் சூரியன், சலனமுள்ள மௌனம், வியர்வை வாசைன என்று இந்த நூலின் வழிநெடுக பல முரண்களைச் சந்திக்கலாம். இவைதான் இந்த நூல் தாங்கியிருக்கும் சிந்தனை அரண்கள்

 1. வண்ணங்களின் பின்னால்

  .25

  No.of.Pages.48

  Size.Crown

  Author.திரு. லூர்து எஸ். ராஜ்

  Size:Crown

  அறிவியல் கோட்பாடுகளை அழகாக, எளிமையாகப் புரிந்துகொள்ளும் வண்ணம் கற்றுத்தர ஆசிரியர்கள் தவறிவிட்டால், மாணவர்கள் அவற்றை மனப்பாடம் செய்து அவற்றைத் தேர்வில் எழுதி மதிப்பெண் பெறுவர். இதனால் அறிவியலுக்குள்ளே புதைந்திருக்கும் பகுத்தறிவு, அழகியல், இயற்கை விதி ஆகியவற்றை உள்வாங்கத் தவறிவிடுகின்றனர் மாணவர்கள். இத்தகையச் சூழலில், பள்ளிப்பருவ மாணவர்களின் புரிந்துணர்வுக்கேற்ப அந்தப் பருவத்தில் அறிய வேண்டிய சில கோட்பாடுகளைத் தெரிந்தெடுத்து சிறுகதைகளாகத் தந்திருக்கிறது இந்நூல். அறிவியல் கோட்பாடுகளை இவ்வளவு எளிமையாகச் சொல்ல முடியுமா என வியக்க வைக்கிறது

 1. ஆசைக் கேள்விகள்

  .25

  No.of.Pages.56

  Size.Crown

  Author.முனைவர் மி. நோயல்

  Size:Crown

  உணவு, பாதுகாப்பு, இனப்பெருக்கம் என்ற முப்பரிமாணங்களில் ஏனைய உயிரினங்களின் தேவை அடங்கிப்போகிறது. ஆறறிவு மனிதருக்கு... தேடல் அதிகம் தேவைகளும் அதிகம் அவற்றை நிறைவேற்ற ஆசைகளும் அதிகம் ! இவற்றை அடைவதற்கான வழிமுறைகளும் அதிகம் ! ஆசைகள் எல்லாம் மோசம் என்று ஒதுக்கிவிட முடியாது. அது எதார்த்தமும் அல்ல! ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடுதலைக்கான ஆசையை எந்த அளவுகோலால் அளவிடுவது? ஆசைக்கு அறநெறி அவசியமா? ஆசைக்கு நேர்மை அவசியமா? ஆசைக்கு சமூக அக்கறை அவசியமா? இப்படி எழும் பல கேள்விகளுக்கு தெள்ளிய நீரோடைபோன்ற தன் சிந்தனைகளால் விடையளிக்கிறார் நூலாசிரியர்.

 1. என்றும் இளமை

  .25

  No.of.Pages.56

  Size.Crown

  Author.முனைவர் மி. நோயல்

  Size:Crown

  இளமையாக வாழ யாருக்குத்தான் ஆசை இல்லை? மாதாந்திரச் செலவுத் திட்டத்தில் பல நூறுகளை ஒதுக்குவதால் இளமை ஊஞ்சலாடப் போவதில்லை. தோற்றங்களைக் கண்டே நம் சமூகம் தோற்றுப் போகிறது. மாற்றப்பட வேண்டியவை நமது மனப்பாங்கும் அணுகுமுறைகளும் என்பதை மனதில் கொண்டு, உடலியல் - உளவியல் - சமூகவியல் என்று பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய தொலைநோக்கு இளமையை நமக்குக் காட்டியுள்ளார் நூலாசிரியர்

 1. கனிவே துணை

  .25

  No.of.Pages.56

  Size.Crown

  Author.முனைவர் மி. நோயல்

  Size:Crown

  வன்முறையே துணை என்று பாலபாடம் தொடங்குகிற இக்காலத்தில்ஒரு மாற்றுச் சிந்தனை தேவைப்படுகிறது. புத்தர் பூமி, அகிம்சை பூமி என்பதெல்லாம் வெறும் அரசியல் சொல்லாடல்களாக நின்றுபோகாமல் தனிநபர் வாழ்விற்கும், குடும்ப உறவிற்கும், சமூக வாழ்விற்கும் தேவையான மானுடத்தின் மென்மையான ஆனால், ஆக்கத்தின் பேராற்றல் படைத்த கனிவு உணர்வின் பல்வேறு பரிமாணங்களை முன்வைக்கிறது இச்சிற்றேடு

 1. நிமிடச் சொத்து

  .25

  No.of.Pages.56

  Size.Crown

  Author.முனைவர் மி. நோயல்

  Size:Crown

  காலத்தை விற்று காசுபார்க்கும் காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். போனால் வராத பொன்னான நேரத்தை சும்மா என்ற சொல்லுக்குள் அடக்கி வைத்தும் பொழுது போகவில்லை என்று கற்பித்தும் வாழ்க்கையைப் பொழுதுபோக்காக்கி விடுகிறோம். இந்தப் பின்னணியில் காலத்தின் அருமையை உணர்த்தும் முத்தான கருத்துகளை நிமிடச் சொத்தாக நமக்குத் தந்திருக்கிறார் நூலாசிரியர் எந்த வயதினரும் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிமையான சொல்லாட்சியும் அனுபவப்பூர்வமான எடுத்துக்காட்டுகளும் எதார்த்தமான பார்வையும் கொண்டிருப்பது இச்சிற்றேட்டின் சிறப்பம்சம் எனலாம்.

 1. திருத்தந்தை பிரான்சிஸ்

  .18

  No.of.Pages.40

  Size.Crown

  Author.தம்புராஜ் சே.ச.

  Size:Crown

  புதிய திருத்தந்தையைப் பற்றிய அடிப்படையான, சுவையான, பொருளுள்ள பல தகவல்களைத் தொகுத்துத் தருகிறது இச்சிற்றேடு.

 1. பிள்ளை வளர்ப்பு

  .60

  No.of.Pages.128

  Size.Demi

  Author.அருள்பணி. அடைக்கலராஜ் ஆல்பர்ட்

  Size:Demi

  நாம் வளர்ந்த கலை மறந்துபோனதால் இன்று வளர்ப்புக் கலை அவசியமாகிறது. இன்று ஒரு பிள்ளையை வளர்ப்பதற்கே படாத பாடுபடுகின்றனர் பெற்றோர் ! மாறிவரும் சமூக - பொருளதார - பண்பாட்டுச் சூழல் இதற்குக் காரணம் என்று உறுதியாகச் சொல்லலாம். என்னதான் சூழல்கள் மாறினாலும், ஒரு குழந்தையின் வளர்ப்பில் நம் சமூகத்தின் மற்றும் குடும்பத்தின் பங்கு முதன்மையாக இருக்கிறது. குடும்பத்தின் பிரதிநிதிகளான பெற்றோரும் சமூகத்தின் பிரதிநிதிகளான ஆசிரியர்களும் பிள்ளை வளர்ப்புக் கலையில் சிறப்புப் பெறுகிறார்கள். இதைத்தான், மாதா பிதா குரு தெய்வம் என்று தமிழ்ச் சமூகம் கற்பிக்கிறது. கல்வி��

 1. இனிகோ ஆன்மிகம்

  .20

  No.of.Pages.40

  Size.Crown

  Author.சேவியர் இருதயராஜ், சே.ச.

  Size:Crown

  இனிகோவின் ஆன்மிகம் என்பது, புனித இஞ்ஞாசியார் இயேசு சபையைத் தொடங்கிவிட்டு அதற்காக அவர் உருவாக்கிய ஆன்மிகம் அல்ல. அவரது ஆன்மிகத்தின் விளைவே இயேசு சபையின் உதயம். இன்னும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், இனிகோ ஒரு பொதுநிலையினராக இருந்தபோது கிடைக்கப் பெற்றதே இந்த உன்னத ஆன்மிகம். யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உயரிய நோக்கோடு, தனக்குக் கிடைத்த ஆன்மிக அனுபவத்தைப் பிறரும் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், ஆன்மிகப் பயிற்சிகளாக அவர் முறைப்படுத்தித் தந்திருக்கிறார். இந்த ஆன்மிகம் அவரது வாழ்வின் பல்வேறு பரிமாணங்களோடு பின்னிப் பிணைந்த ஒன்று �

 1. Sparks 2014

  .25

  No.of.Pages.88

  Size.Demi

  Author.Jerry SJ

  Size:Demi

  Although the Jesuit history reaches back nearly 500 years, it did not have a continuous flow. It met with a moment of SUPPRESSION in 1773 and later, a moment of RESTORATION in 1814. Now the Society of Jesus is COMMEMORATING the 200th anniversary of its restoration. Forty one years of its absence from the active mission in the Church, seems to us, have been in the divine plan to provide it a period of purification and incubation to gather up its creative energies to burst forth into new and diverse missions. Highlighting some selective, but meaningful moments in the history of Jesuits and situating them in today s context, this book offers a Spiritual Exercise of Restoration in the form of meditations. - See more at: http://www.vaigaraibooks.com/bp2013-21.html#sthash.5XwnDVAy.dpuf

 1. நீர்ப்பாலை

  .50

  No.of.Pages.96

  Size.Demi

  Author.சுப்ரபாரதிமணியன்

  Size:Demi

  ஓர் எழுத்தாளரின் அனுபவப் பதிவாய், ஒரு வாசகரின் திறனாய்வாய், ஒரு சமூக அக்கறையுள்ள மனிதரின் பார்வையாய் இந்நூலின் பல்வேறு பரிமாணங்களைக் காண முடியும். சமூக - பொருளாதார- அரசியல் - பண்பாட்டுச் சூழலை உரசாத எந்த எழுத்தும் உயிரற்றதாகிறது. அத்தகைய உரசிலில்தான் எழுத்துக்கும் குரல் உண்டு என்பதை இந்நூலில் கேட்க முடிகிறது. அது ஏதோ ஒரு குரலற்ற சமூகத்தின் குரலாய் ஒலிக்கிறது என்பதை ஆழ்ந்த வாசிப்பில் நிச்சயம் உணர முடியும். திருப்பூருக்குத் திரும்பி வந்தபோது நொய்யல் நதி காணாமல் போயிருந்தது என்கிறார் நூலாசிரியர் சுப்ரபாரதிமணியன். தெள்ளிய நீரோட்டம் மறைந்து உலகமயம��

 1. இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்

  .50

  No.of.Pages.96

  Size.Demi

  Author.அருள்பணி. குமார் ராஜா

  Size:Demi

  கிறித்தவத்தைப் பொறுத்தளவில், விவிலியம், வரலாறு, இறையியல், மரபு, பண்பாடு, சமூகம் ஆகிய கூறுகளின் அடிப்படையில் பல்வேறு தன்மைகள் இறைவேண்டலில் அடங்கியுள்ளன. அந்தப் பல்வேறு அம்சங்களைச் சான்றுகளோடும், இறையியல் சிந்தனைகளோடும் நிரல்படத் தொகுத்துத் தருகிறது இந்நூல். எதார்த்தச் சொற்களால், நாவாடும் பாடலால், உறவால், உடல்மொழியால், அமைதியால், அறநெறியால், சிந்தனையால், செயலால், நோன்பால், மனித மாண்பால், சமத்துவ உணர்வால், சமதர்ம வழியால் இறைவேண்டல் சாத்தியமே என்கிறது ! ஒட்டுமொத்த விவிலியத்தில் விதிவிலக்காக, திருப்பாடலை வாசித்து முடித்ததும் இது ஆண்டவரின் அருள்வாக்

 1. தொண்டு ஆற்றிடவே . . .

  .50

  No.of.Pages.96

  Size.Demi

  Author.முனைவர் அருள்பணி. அ. ஆல்பர்ட்

  Size:Demi

  அருளடையாளங்களை நிறைவேற்றுவது மட்டுமா மேய்ப்புப்பணி? திருநிலைப்படுத்தப்பட்ட அருள்பணியாளர்களுக்கு மட்டும் உரித்தானதா மேய்ப்புப்பணி? கிறிஸ்துவின் அடையாளம் தாங்கிய அத்தனை பேருக்கும் மேய்ப்புப்பணிக்கான கடமை உண்டு. இந்தக் கடமையை சமூகக் கரிசனையாக்கி, தொண்டுள்ளத்தோடு தொடர்புபடுத்தினால் இந்த வட்டம் இன்னும் விரிவடையும். தேவையில் இருக்கும் மனிதர்களில் எத்தனை வகை! இவர்கள் இத்தனை நாள் எங்கே இருந்தார்கள்? என் கண்முன்னேதான் இருந்தார்கள்! நான் எங்கே இருந்தேன்? இவர்கள் கண்முன்னேதான் இருந்தேன்! இந்தக் கரிசனையற்ற இடைவெளியை அக்கறையோடு நிரப்புகிறது இந்நூல��

 1. வாழ்வு வளமாக . . .

  .60

  No.of.Pages.112

  Size.Demi

  Author.A.M. ராஜ்

  Size:Demi

  முன் அட்டையில் காணப்படும் 30 வயது நிரம்பிய பெண் ஜெசிகா கோக்ஸ், பிறப்பில் ஏற்பட்ட குறைபாட்டின் காரணமாக இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தவர். இன்றைக்கு, உலகின் முதல் மாற்றுத்திறனாளி - விமான பைலட் என்ற பெருமை அவருக்கு உண்டு. டேக்வாண்டா என்ற தற்காப்புக் கலையிலும் இரண்டு பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார். சிறப்பாக வடிவமைக்கப்படாத சாதாரண வாகனத்தை இயல்பாக ஓட்டுகிறார். நிமிடத்திற்கு 25 சொற்களைக் காலால் தட்டச்சு செய்கிறார். இரண்டு கைகளும் இல்லை என்று அவர் பரிதவித்திருந்தால், நமது அனுதாபம் மட்டுமே மிஞ்சியிருக்கும். அடடே, இன்னும் இரண்டு கால்கள் இருக்கின�

 1. சாதனை முத்துகள்

  .50

  No.of.Pages.96

  Size.Demi

  Author.கலைமண் தோழர்கள்

  Size:Demi

  சாதனைப் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்ற எவ்வித உள்நோக்கமும் இன்றி, பிறரது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற பரபரப்பு ஏதுமின்றி, சாதிக்கிறோம் என்ற உணர்வுமின்றி, போதிய ஊடக வெளிச்சமுமின்றி, சாதாரணர்களாய் வாழ்ந்து சமூகத்திற்குப் பயன்தரும் தன்னலமற்ற சில மாமனிதர்களைத் தேடிக் கண்டறிந்து நம் கண்முன் நிறுத்துகிறது இந்நூல். நெஞ்சில் ஈரமும், கொஞ்சம் படைப்பாற்றலும், மனித நேயமும், சமூக அக்கறையுமே இந்தச் சாதனையாளர்கள் ஏறிச்சென்ற படிக்கட்டுகள் ! இருளைப் பழிப்பதைவிட ஒளியை ஏற்றுவது மேல் என்ற பொன்மொழிக்கேற்ப, சமூகச் சூழலில் நிலவும் பல கசப்பான எதார்த்தங்களுக்க

 1. நித்தமும் நிம்மதி

  .60

  No.of.Pages.120

  Size.Demi

  Author.ச. ஜெகநாதன்

  Size:Demi

  பல்வேறு அக, புறச் சூழல்கள் காரணமாக மனிதர்கள் நிம்மதியைத் தொலைத்துவிடுகிறார்கள். நிம்மதியை அன்றாட வாழ்க்கையாக்க முடியும் என்கிறது இந்நூல். பல்வேறு பிரச்சனைகள், மனவோட்டங்கள், சவால்கள், சாதனைகள், முன்னுதாரணங்கள், நிகழ்வுகள், வடுக்கள், சுவடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வண்ணம், கிறித்தவ ஆன்மிகத்தின் சாராம்சத்தோடு இந்நூல் நிம்மதியின் திசையைக் காட்டுகிறது.

 1. வேர்கள்

  .150

  No.of.Pages.336

  Size.Demi

  Author.விமா. தாசன் சே.ச.

  Size:Demi

  ஆலமரமாய்க் கிளைபரப்பியிருக்கும் இயேசுசபையின் புதிய மதுரை பணித்தள வரலாற்றில் வியர்வைத் துளிகளால் நனைந்த வேர்களாக நின்றவர்கள் அருள்சகோதரர்கள்! அவர்களின் அர்ப்பண வாழ்வைப் பின்பற்றவும், தூண்டுதல் பெறவும் இந்த வேர்கள் அரிய கருவூலமாகத் திகழ்கிறது. புதிய மதுரை பணித்தளத்தின் தொடக்கம் முதல் 2011 வரை வாழ்ந்து இறைவனடி சேர்ந்த அருள்சகோதரர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் தொடர்பான பல விவரங்களைத் தேடி எடுத்துத் தந்திருக்கிறது இந்நூல் .

 1. To Follow Jesus More Nearly

  .75.00

  No.of.Pages.124

  Size.Demi (Reprint)

  Author.James Rodrigues S.J.

  Size:Demi (Reprint)

  A manual of an eight-day retreat based on the dynamics of The Spiritual Exercise of St Ignatius.

 1. முன்னேற்றத்தின் முகவரி

  .100.00

  No.of.Pages.224

  Size.Demi (Reprint)

  Author.ஞா. சந்திரன்

  Size:Demi (Reprint)

  நம்பிக்கையோடு உழைத்து முன்னேற முகவரி தேடும் இளையோருக்கும், வாழ்வில் முகவரி இழந்து விரக்தியில் வாடும் இளையோருக்கும் இந்நூலில் வழியும், வழித்தடமும் இருக்கின்றன.

 1. குழந்தைகளுக்கான விடுகதைகள்

  .15.00

  No.of.Pages.40

  Size.Crown (Reprint)

  Author.திருமதி ஆ. தமிழரசி

  Size:Crown (Reprint)

  குழந்தைகளுக்கான பல அருமையான விடுகதைகளின் தொகுப்பு இந்நூல்.