Book Store Online : Buy Books Online at Best Prices in India | Books Shopping @ vaigaraibooks.com

Book Published 2014

Sofas
  1. Media issues & Reviews

    .35

    No.of.Pages.64

    Size.Demi

    Author.A. Stephen, S.J.

    Size:Demi

    The book critically studies various media issues in six selected articles already published in reputed journals and websites. The author s intellectual inquiry into the recent trends emerged in media is enlightening and commendable. It is heartening that he has taken a society-centric approach rather than a media-centric approach while analyzing the problems of the media. And this probably is what makes the book interesting and powerful.

  1. புனித இஞ்ஞாசியாரின் வாழ்க்கை வரலாறு

    .45.00

    No.of.Pages.80

    Size.Demi

    Author.மாம்ப்ரா. சே.ச.

    Size:Demi

    போரில் காயம்பட்டு மீண்டெழுந்த ஒரு மாற்றுத் திறனாளியின் கதையை... தன்வரலாறை எழுதத் தயங்கியவரின் வரலாறை.... உடல் பயிற்சிபோல ஆன்மிகத்துக்குப் பயிற்சி அளித்தவரை.... தன் பெயரைப் பின்னிறுத்தி இயேசுவின் பெயருக்காய்த் தவமிருந்தவரை... நன்மைக்கும் தீமைக்கும் இடையே துலாக்கோல் பிடிக்கக் கற்றுத்தந்தவரை.... திருத்தூதுப் பணியோடு இணைந்த துறவற வாழ்வுப் பரிமாணத்தை..... என்று பல்வேறு அம்சங்களை இந்நூல் படைத்திருக்கிறது.

  1. அறவழியே இறைவழி!

    .75.00

    No.of.Pages.168

    Size.Demi

    Author.அருள்கடலார்

    Size:Demi

    பல்வேறு அறப்பிரச்சனைகளுக்கு மத்தியில், பொருளாதாரம், பாலியல், குடும்பம், ஊடகம், மருத்துவம், தொழில், சுற்றுச்சூழல் என எழு தலைப்புகளைத் தங்கள் அறநெறி ஆய்வுக்கு எடுத்திருக்கின்றனர். அறநெறி உணர்வு நலிந்தும், மெலிந்தும், சிதைந்தும், சரிந்தும் வரும் இவ்வேளையில், இந்நூலாசியர்கள் மிக உபயோகமான கட்டுரைகளைப் படைத்திருப்பது மிகவே பாராட்டுக்குரியது.

  1. கிறித்தவப் பிள்ளைத்தமிழ் நூல்களில் மனித மாண்புகள்

    .75.00

    No.of.Pages.120

    Size.Demi

    Author.முனைவர் சகோ. அருள்சீலி

    Size:Demi

    தான் நேசிக்கும் பாட்டுடைத் தலைவனை, தலைவியைக் குழந்தையாக்கிக் கவிபாடுவதை பிள்ளைக்கவி’ அல்லது ‘பிள்ளைத்தமிழ்’ என்கிறது தமிழ் சிற்றிலக்கிய மரபு. இதன் ஒரு சிறுபகுதியே கிறித்தவப் பிள்ளைத்தமிழ் நூல்கள்! தமிழில் முன்னூறுக்கும் மேற்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்கள் இருந்தும், அவற்றில் எவரும் தமது நிகழ்காலத்தைப் படம்பிடித்துக்காட்டவில்லை. ஆனால், கிறித்தவப் பிள்ளைத்தமிழ் நூல்களில் சமுதாயச் சீர்கேடுகள் அனல் பறக்கின்ற வகையில் சாடப்படுகின்றன.

  1. உயிர் வலி

    .65.00

    No.of.Pages.112

    Size.Demi

    Author.ரா.பி. சகேஷ் சந்தியா

    Size:Demi

    ஆண்டானோ, அடிமையோ உயிர் ஒன்றுதானே ! தண்டனை என்று ஒப்பனை செய்தாலும் உயிரைப் பறிப்பது கொலைதானே ! குற்றவாளியைத் திருத்தி, புது மனிதராக்குவதே நாகரிகச் சமூகத்தின் முன்னிருக்கும் சவால் ! இந்தச் சவாலைப் பின்புலமாகக் கொண்டு, மரணதண்டனை குறித்த பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கி, இறையியல் சிந்தனையில் தோய்த்து உயிரின் வலியை உணர்ந்தவராய் காலத்திற்கேற்ற இந்நூலைப் படைத்திருக்கிறார் ஆசிரியர்.

  1. இளையோரின் திருத்தந்தை

    .22.00

    No.of.Pages.48

    Size.Demi

    Author.ம. டைட்டஸ் மோகன்

    Size:Demi

    திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் பிரேசில் நாட்டில் நடந்த 28ஆவது உலக இளையோர் மாநாடு ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது. காரணம் யாதெனில், திருத்தந்தையின் உரைகள் அவர்களது செவிகளைத் தாண்டி இதயத்தைத் தொட்டன. அவரது இயல்பான பிரசன்னம் ஓர் ஈர்ப்பு விசையை எற்படுத்தியிருக்கிறது. ஒளிவட்டம் சூடாத அவருடைய ஆளுமை அவர்களுக்கு வெளிச்சத்தைக் காட்டியிருக்கிறது. இளையோரை நண்பர்களாகப் பார்க்கும் அவரது தோழமை அவரை இளையோரின் ‘நம்ம ஆளு’ ஆக்கியிருக்கிறது.

  1. Fanning Fires on Drifting Icebergs

    .60.00

    No.of.Pages.104

    Size.Demi

    Author.Mark Barco, S.J.

    Size:Demi

    The author analyses the scenario of the post-conciliar Church from the perspective of the broader vision of the Council. The analysis exposes various cowardice and selfish attempts of keeping this burning love under the bushel and demands our pro-active role in building up the Kingdom of God. The enriching life experiences of the author make the book more pragmatic and concrete than theoretical and conceptual.

  1. திரை விமர்சனக்களம்

    .75.00

    No.of.Pages.160

    Size.Demi

    Author.அ. இருதயராஜ், சே.ச.

    Size:Demi

    ‘ஒவ்வோர் ஊடகப் படைப்பின் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் ஒரு வர்க்கத்தின் பின்புலம் இருக்கும்’ என்பார் புரட்சியாளர் மாவோ. இதை மனதில்கொண்டு திரைக்கு முன்னால் நிகழும் வழக்கமான விமர்சனத்தை, திரைக்குப் பின்னாலும் நிகழ்த்துகிறது இந்நூல். மேலும், தமிழ்த் திரைப்படங்களின் உள்ளடக்கம் மாறியிருக்கின்றதா என்ற கேள்வியால் சிலம்பம் ஆடுகிறது. இந்த விமர்சனக்களம் எழுப்பும் சமூக அக்கறை, காட்டும் மனித நேயப் பார்வை, சுட்டும் சமூகநீதி புதிய தேடலுக்கு வழிவகுக்கின்றது.

  1. அமிலமழையில் பூமி

    .30.00

    No.of.Pages.64

    Size.Demi

    Author.சேவியர் அந்தோனி, சே.ச.

    Size:Demi

    இதுவரை நாம் அனுபவித்த பூமி, நமது முந்தைய தலைமுறை நமக்கு விட்டுச்சென்றது. அடுத்த தலைமுறைக்கு நாம் எதை விட்டுவைத்திருக்கிறோம்? இது ஒரு நாட்டின் பிரச்சனையல்ல. ஒட்டுமொத்த உலகின் பிரச்சனை! சுற்றுச்சூழலைக் கட்டிக்காப்பதில் நமது சிந்தனைகள் உலகமயமாக்கப்பட வேண்டும். இந்தச் சிந்தனைகளைத் தாங்கியடி சுவையாக, ஆனால் அக்கறையுடன் நம்மைச் செயல்பாட்டுக்கு அழைக்கிறது இந்நூல் !

  1. சிற்றுயிரிடம் கற்றுக்கொள்வோம்

    .30.00

    No.of.Pages.72

    Size.

    Author.லூர்து எஸ். ராஜ்

    Size:

    சிறார்களுக்குப் பிடித்த கதை வடிவத்தில் ஒவ்வொரு சிற்றுயிரிடமும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அறிவியல் சிந்தனைகளை, பகுத்தறிவுக் கருத்துகளை, உயிர்நேயத்தை, சமூக அக்கறையைச் சுவையாகத் தருகிறது இந்நூல் ! சிறார்களின் உலகத்தில் கால் ஊன்றி, அவர்களது பார்வையிலேயே இந்நூலைப் படைத்திருப்பது ஆசிரியரின் தனிச் சிறப்பு !

  1. Ramna the Mystic

    .120.00

    No.of.Pages.240

    Size.Demi

    Author.Fr. Nathan, C.S.C

    Size:Demi

    The book critically studies various media issues in six selected articles already published in reputed journals and websites. The author’s intellectual inquiry into the recent trends emerged in media is enlightening and commendable. It is heartening that he has taken a society-centric approach rather than a media-centric approach while analyzing the problems of the media. And this probably is what makes the book interesting and powerful.

  1. Witness to the Gospel

    .35.00

    No.of.Pages.64

    Size.Demi

    Author.Thamburaj, S.J.

    Size:Demi

    The book highlights the sparkling characteristics of some selected Jesuit Brothers who bore witness to the Gospel through their simple, but unique contributions. The classification of these personalities under various headings (Saints, Blessed martyrs, Architects, Painters, Explorers, Specialists, Scientists and Holy men) signifies that they stand out for their multifaceted undertakings in different contexts and indicates the crucial role of Jesuit Brothers in the Jesuit history

  1. செயப்பாட்டு வினை

    .45.00

    No.of.Pages.80

    Size.Crown

    Author.பிலிப்குமார்

    Size:Crown

    அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளை, அனுபவங்களை, மனிதர்களை மாற்றுக்கோணத்தில் புதுக்கவிதைகளாய்ப் பதிவுசெய்திருக்கிறது இந்நூல். ஒவ்வொரு கவிதைக்கும் ஏற்ற வண்ணம் ஓவியங்கள் அமைந்திருப்பது, கண்ணுக்கும் சிந்தனைக்கும் விருந்தாகின்றது.

  1. ரெய்மோன் பணிக்கர் வாழ்வும் வாக்கும்

    .120.00

    No.of.Pages.216

    Size.Demi

    Author.ஆனந்த் அமலதாஸ், சே.ச.

    Size:Demi

    கிறித்தவம், இந்துசமயம், பவுத்தம், இஸ்லாம் ஆகியவற்றின் சாராம்சத்தை உள்ளொளியாகக் கொண்டு, ‘அண்டம் - கடவுள் - மனிதர்’ என்று அனைத்தும் ஒருங்கிணையும் ஒரு மையப் புள்ளியைக் கண்டறிந்தவர் அறிஞர் ரெய்மோன் பணிக்கர். ஆங்கிலம் உள்பட்ட பிற மொழிகளில் அமைந்துள்ள அவரது படைப்புகளின் தமிழாக்கமே இந்நூல்.

  1. உறவின் உயரங்கள்

    .60.00

    No.of.Pages.96

    Size.Demi

    Author.குமார் ராஜா

    Size:Demi

    ஆழமான உறவுகளால் நம் உயரத்தையும் நீட்டிக்கொள்ள அழைப்பு விடுக்கிறது இந்நூல்! நமது உயரம் அடிக்கணக்கு அல்ல, அது உறவுக்கணக்கு என்று சுட்டிக்காட்டி, தனது அனுபவங்களின் அடிப்படையில் உறவின் பல்வேறு பரிமாணங்களை எளிமையாக, நேர்த்தியாக நமக்குப் படைத்திருக்கிறார் ஆசிரியர்.

  1. அன்னை தெரசா நிகழ்வுகள்!

    .150.00

    No.of.Pages.336

    Size.Demi

    Author.சேவியர் அந்தோனி, சே.ச.

    Size:Demi

    தீண்டாமையை வகைபிரித்துக் கொண்டாடும் சமூகத்தில் விளிம்புநிலை மக்களைத் தொட்டு அரவணைத்தார் அன்னை ! எந்த வள்ளலாலும் செய்ய முடியாத ஈகை இதுவல்லவா? அன்னை தெரசாவை வணங்கிச் செல்வதற்கும், மேற்கோள் காட்டுவதற்கும் அல்ல, அவரைப்போல் வாழ்ந்துகாட்ட சவால்விடுக்கிறது இந்நூல்.

  1. நீங்களும் புனிதராகலாம்

    .150.00

    No.of.Pages.312

    Size.Demi

    Author.அருள்சகோதரி மேரி ஆனந்த், D.M.

    Size:Demi

    திருஅவையின் வரலாற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 50 புனிதர்களின் வரலாறு, வாழ்வு நெறி, சாட்சிய வழி, திசைகாட்டும் பாதைகள், வழிகாட்டும் சுவடுகள் ஆகியவற்றை எளிய நடையில் விரிவாகத் தொகுத்து வழங்குகிறது இந்நூல்.

  1. 1000 போற்றிப் புகழ்மாலை

    .18.00

    No.of.Pages.104

    Size.Crown (Reprint)

    Author.சேவியர் இருதயராஜ், சே.ச.

    Size:Crown (Reprint)

    ஆன்மிக வாழ்விற்கு செபம் ஊற்றாக இருக்கிறது. இந்த ஊற்றிலிருந்து பருகும்போது நம் வாழ்வே வளம் பெறுகிறது. இறைவனைப் போற்றும்போது நம் செபம் நம்மைக் கடந்து செல்லும் ஒரு புனிதச் செயலாக மாறுகின்றது. இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.

  1. படிப்பது எப்படி?

    .100.00

    No.of.Pages.260

    Size.Demi (Reprint)

    Author.யூஜின் முத்து, சே.ச.

    Size:Demi (Reprint)

    தேர்வோடும் மதிப்பெண்களுடனும் தொடர்புபடுத்தியே புத்தகம் படிப்பது ஒரு சுமையாகிப் போனது. அது ஒரு தேடல்... அது ஒரு மனப்பாங்கு... அது ஒரு கலை... அது ஒரு நீச்சல்... என்று புரிந்துகொண்டால், தேர்வும் மதிப்பெண்களும் ஒரு வாய்ப்பாக அமையுமே தவிர, சுமையாகாது. அதற்கான எளிய முயற்சியே இந்நூல்.

  1. Compendium

    .100.00

    No.of.Pages.222

    Size.Demi (Reprint)

    Author.

    Size:Demi (Reprint)

    Catechism of the Catholic Church.

  1. புனித சவேரியார்

    .50.00

    No.of.Pages.104

    Size.Demi (Reprint)

    Author.மாம்ப்ரா. சே.ச.

    Size:Demi (Reprint)

    பிறரது வாழ்வையும் ஊடுருவி மாற்றத்தைக் கொண்டு வருவதுதான் உண்மையான மாற்றம் என்ற தத்துவத்தை உருவாக்கிய மாதிரிப் புனிதர் சவேரியாரின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்டது இந்நூல்.