Book Store Online : Buy Books Online at Best Prices in India | Books Shopping @ vaigaraibooks.com

Book Published 2017

Sofas
 1. வாழ்வை வளமாக்கும் திறமைகளும் பண்புகளும் - 01

  .75.00

  No.of.Pages.112

  Size.Demi (Reprint)

  Author.முனைவர் ச.இஞ்ஞாசிமுத்து, சே.ச.

  Size:Demi (Reprint)

  வளமாக மிளிர - உறுதியாக நிலைக்க - சீராக வளர என்று மூன்று கருத்தோட்டங்களை நூலின் முதல் பாகமும், தழைத்து உயர - சரியாக முயல - விரிந்து மலர –- சிறப்பாக வெல்ல என்று நான்கு கருத்தோட்டங்களை நூலின் இரண்டாம் பாகமும் முன்வைக்கின்றன.

 1. கேள்வித் தீ

  .70.00

  No.of.Pages.120

  Size.Demi

  Author.ச. தினகரன்

  Size:Demi

  சமூகத்தின் அக-புறவாழ்வியல், அரசியல் - பொருளியல் எதார்த்தங்கள், அன்றாட அவலங்கள், திணிக்கப்படும் கற்பிதங்கள், நியாயப்படுத்தப்படும் அடிமைத்தனங்கள், நிலவும் தவறான அறநெறி, நீடிக்கும் ஆதிக்கம், உதயமாக வேண்டிய சமத்துவ மானுடம் ஆகியவை குறித்த பல கேள்விகளால் வேள்வி செய்கிறது இக்கட்டுரைத் தொகுப்பு .

 1. குடும்பக் கலை

  .120.00

  No.of.Pages.216

  Size.Demi

  Author.எம். ஏ. ஜோ

  Size:Demi

  அன்றாட நடப்புகளை அலசிப் பார்த்து, குடும்பங்கள் கற்க வேண்டிய பாடத்தைப் பகுத்துச் சொல்லி, அக ஆய்வுக்கான கேள்விகளை எழுப்பி, அனுபவத்திலிருந்து குடும்பக்கலைக்கான வாழ்வியலை வளர்த்துக்கொள்ள அழைக்கிறது இந்த நூல்.

 1. விடியல் தேடும் வினாக்கள்

  .70.00

  No.of.Pages.104

  Size.Demi

  Author.ப. ஜஸ்டின் ஆன்றணி

  Size:Demi

  நம் ஆளுமையைச் செதுக்க வழியமைத்து, மாற்றத்திற்கான கேள்விகளை எழுப்பி, சமூக அக்கறையுடன் சிந்திக்கிறது இந்நூலில் உள்ள கட்டுரைத் தொகுப்பு.

 1. துணையாகும் இறைவன்

  .60.00

  No.of.Pages.96

  Size.Demi

  Author.அருள்பணி. அந்தோனி சேவியர், M.Sc., L.L.B.

  Size:Demi

  நமக்குள்ளும் நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களுக்குள்ளும் ஓர் இறையாற்றல் செயலாற்றுகிறது என்ற செய்தியை நமது அன்றாட வாழ்வில் உறுதிப்படுத்தும் ஆன்மிக நூல் இது.

 1. வெற்றிப் பாதைகள்

  .30.00

  No.of.Pages.56

  Size.Crown

  Author.டாக்டர் மெ. ஞானசேகர்

  Size:Crown

  கடிவாளமிட்ட குதிரையைப் போல நமக்கு இலக்குத் தெளிவு இருந்தால் நமக்கான வெற்றிப்பாதை நிச்சயம் தெளிவாகும். நமது பார்வையையும் நமது இலட்சியத்தையும் கூர்மைப்படுத்த சில அனுபவங்களால் சான்றளித்து நம்மை நாமே நெறிப்படுத்திக்கொள்ள `வெற்றிப் பாதைகள்’ என்ற நூல் வழிகாட்டியாக அமைந்துள்ளது.

 1. அர்த்தமுள்ள அனுபவங்கள்

  .30.00

  No.of.Pages.56

  Size.Crown

  Author.டாக்டர் மெ. ஞானசேகர்

  Size:Crown

  அவ்வப்போது மின்னல் போல நிகழ்ந்து மறையும் பல அனுபவங்கள் நீண்ட ஆயுளைப் பெறுவதில்லை. திறந்த மனதோடு அவற்றை அசைபோடும்போது, அவற்றின் ஆயுள் நீடிக்கிறது. சில அனுபவங்களில், நமக்குள்ளும் ஏதோ ஓர் உள்ளொளி பிறக்கிறது. அந்த உள்ளொளி நமது வாழ்வுக்குப் பாதையைச் செதுக்குகிறது. இவ்வாறான அனுபவங்களை `அர்த்தமுள்ள அனுபவங்கள்’ நூல் வாயிலாக நம்முடன் பகிர்ந்துள்ளார் ஆசிரியர்.

 1. மனிதர்களும் மாதிரிகளும்

  .30.00

  No.of.Pages.56

  Size.Crown

  Author.டாக்டர் மெ. ஞானசேகர்

  Size:Crown

  எத்தனையோ மனிதர்கள் நம்மைக் கடந்து சென்றாலும், அவர்களில் சிலர் நம்மை ஈர்க்கின்றனர். சிலரது ஆளுமைகளை நாம் ரசிக்கிறோம். சிலரிடம் பாடம் கற்கிறோம். ஏதோ ஒரு வகையில் அவர்கள் நமக்கு முன்மாதிரியாக அமைந்துவிடுகிறார்கள். இத்தகைய அனுபவங்களின் தொகுப்பே `மனிதர்களும் மாதிரிகளும்’ என்ற நூல்.

 1. திருவடி நிழல்

  .175.00

  No.of.Pages.376

  Size.Demi

  Author.வி. ம. தாசன், சே.ச.

  Size:Demi

  ஆண்டு முழுமைக்குமான நாளொரு திருவிவிலிய வாசகம், அதற்கேற்ற சிந்தனை, பக்தி இலக்கியச் சுவையூட்டும் தியானச் செபம் என்று இந்நூலில் தொகுத்தளித்திருக்கிறார் நூலாசிரியர்.

 1. விண்ணைத் தொடு !

  .180.00

  No.of.Pages.376

  Size.Crown

  Author.அருள்சகோ முனைவர். தி. நிர்மலா, S.A.T., அருள்சகோ. முனைவர் சி. ஜோதி,S.A.T.,

  Size:Crown

  “நீ உன் மனதைத் தொட்டால், அது விண்ணைத் தொடுவதற்குச் சமம்” என்று பக்கம் பக்கமாய் உணர்த்துகிறார்கள் படைப்பாளிகள். காலம்தோறும் நினைவில் இருக்க, நல்லதொரு நினைவுப் பரிசாக வழங்க இது ஏற்ற நூல்.

 1. பஞ்சபூதப் பாதுகாப்பு

  .35.00

  No.of.Pages.88

  Size.Crown (Reprint)

  Author.முனைவர் ச. மி. ஜான் கென்னடி, சேச.

  Size:Crown (Reprint)

  அடர்ந்த காடுகளும், விண்ணை முட்டும் மலைகளும், பாய்ந்தோடும் நதிகளும் நம் ஒவ்வொருவரின் சொத்துகள். ஆகவே, இயற்கையின் கருவான பஞ்சபூதங்களைப் பாதுகாப்பது நம் அனைவரின் அறநெறிக் கடமை என்பதை இந்நூல் மூலம் ஆசிரியர் உணர்த்துகிறார்.

 1. நிகழ்வுகளும் நிஜங்களும்

  .25.00

  No.of.Pages.56

  Size.Crow (Reprint)

  Author.டாக்டர் மெ. ஞானசேகர்

  Size:Crow (Reprint)

  ஒவ்வொரு நிமிடமும் பல்வேறு நிகழ்வுகள் உலகில் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன. அவற்றில் ஒளிந்திருக்கும் நிஜங்களில் நம்மை உயிரோட்டம் மிக்க மனிதர்களாக மாற்றக்கூடிய செயல், சிந்தனைகள் இருக்கின்றன. அத்தகைய கருத்துகள் வாழ்வை மேம்படுத்த உதவும் என்பதை ஆசிரியர் இந்நூலில் அறிவுறுத்துகிறார்.

 1. சம்பவங்களும் சாதனைகளும்

  .25.00

  No.of.Pages.56

  Size.Crown (Reprint)

  Author.டாக்டர் மெ. ஞானசேகர்

  Size:Crown (Reprint)

  சாதித்தவர்களின் சரித்திரங்களை நறுக்கென்று சுட்டிக்காட்டியிருக்கிறார் ஆசிரியர். சாதிக்கத் துடிக்கும் பலரைச் சரித்திர நாயகர்களாக மாற்றவும் பிறரைச் சாதிக்கத் தூண்டவும் உறுதுணையாக அமையும் தகவல்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

 1. விளிம்புகள் தேடும் விடியல்

  .90.00

  No.of.Pages.168

  Size.Demi

  Author.அருள்கடலார்

  Size:Demi

  விளிம்புநிலை மாந்தர்களோடு உணர்வால் ஒன்றித்து, அவர்கள் வாழ்வியலை அறிவால் பகுத்துணர்ந்து, இறையியல் சிந்தனையோடு விடியலுக்கான தேடலை முன்வைக்கிறது இந்தப் படைப்பு.

 1. என்னமோ நடக்குது..!

  .70.00

  No.of.Pages.112

  Size.Demi

  Author.ப. திருமலை

  Size:Demi

  ஒவ்வொரு பிரச்சனைக்கும் தனிமனிதரைக் காரணம் காட்டி, சந்தர்ப்ப சூழலைச் சாக்குச் சொல்லித் தப்பிக்கிற மனோபாவத்திலிருந்து நம்மைக் கடத்திச்சென்று, பரந்துபட்ட சமூக மாற்றச் சிந்தனையுடனும் சமூக அக்கறையுடனும் ஆளும் அரசுகளின் பொறுப்பைத் துணிச்சலுடன் சுட்டிக்காட்டுகிறது இந்தப் படைப்பு!

 1. அகராதியைத் திருத்துவோமா?

  .70.00

  No.of.Pages.128

  Size.Demi (Reprint)

  Author.ம. டைட்டஸ் மோகன் & லூ. பேட்ரிக் பால்

  Size:Demi (Reprint)

  முடியாது என்று முனங்கி முடங்குபவர்களுக்கு உயிர் மூச்சாகவும், முடியும் என்று முயன்று முன்னேறுபவர்களுக்கு ஊக்க மருந்தாகவும் இருக்கும். சும்மா வருவதல்ல சாதனை - மாறாக சுமை சுமப்பதால் வருவதே என்னும் உந்துதலைத் தருகிறது இந்நூல்.

 1. Let's Communicate

  .120.00

  No.of.Pages.240

  Size.Demi (Reprint)

  Author.Dr. J. John Love Joy & Dr. Francis M. Peter, S.J.

  Size:Demi (Reprint)

  Is a course book for students who are in need of basic English for day-do-day use. The emphasis on interaction and creative thinking through activities would help teachers engage their students meaningfully in languare classroom.

 1. சின்னச் சின்ன சிந்தனைகள் (பாகம் 2)

  .75.00

  No.of.Pages.152

  Size.Demi (Reprint)

  Author.ஜெ. மரிய அந்தோனி

  Size:Demi (Reprint)

  மனிதரின் வாழ்வில் வருகின்ற பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டுமென்றால் தீர்க்கமான சிந்தனையும், உறுதியான மனநிலையும் அவசியமானது. நற்சிந்தனைகளால் நிரம்பியிருக்கும் மனிதன் மனச்சிதைவுக்கும் மனவிரக்திக்கும் எளிதில் ஆளாவதில்லை. இந்நூலில் உள்ள சிந்தனைகள் நம் உள்ள வளர்ச்சிக்கு மட்டுமல்ல, நம் ஆன்மிக மலர்ச்சிக்கும் உதவும் என்பதில் ஐயமில்லை.

 1. தண்ணீர் தண்ணீர்..!

  .30.00

  No.of.Pages.80

  Size.Crown (Reprint)

  Author.முனைவர் ச. மி. ஜான் கென்னடி, சே.ச.

  Size:Crown (Reprint)

  தண்ணீரின் அவசியத்தையும், நாகரிகத்தை வளர்த்த நதிகள் இன்று நஞ்சைச் சுமக்கும் நதிகளாக மாறி வருவதையும் மற்றும் அவை எவ்வாறு மாசுபடுத்தப்படுகின்றன என்பதையும் தெளிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது.

 1. ஆகாயத்தின் அழிவு!

  .30.00

  No.of.Pages.80

  Size.Crown (Reprint)

  Author.முனைவர் ச. மி. ஜான் கென்னடி, சே.ச.

  Size:Crown (Reprint)

  எவ்வாறு ஆகாயம் அசுத்தமாகிறது என்பதையும், அதனால் ஏற்படும் விளைவுகள் அனைத்தையும் அறிவியல்பூர்வமாக இந்நூலில் விளக்கியுள்ளார் ஆசிரியர்.

 1. நில நங்கை

  .30.00

  No.of.Pages.80

  Size.Crown (Reprint)

  Author.முனைவர் ச. மி. ஜான் கென்னடி, சே.ச.

  Size:Crown (Reprint)

  மண்ணுக்கும் மனிதருக்கும் இடையேயான தொடர்பையும், மண்ணைச் சீரழிக்காமல் மண்ணில் வளர்சின்ற செடி கொடி, மரங்கள் காடுகளை மதித்துக் காக்க வேண்டும் என்பதையும் தெளிவாக இந்நூலில் எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

 1. சாதிக்கத் தூண்டும் வாழ்வியல் சிந்தனைகள்

  .40.00

  No.of.Pages.72

  Size.Demi

  Author. டாக்டர் மெ. ஞானசேகர்

  Size:Demi

  இந்நூலில் இடம் பெறும் சம்பவங்கள், மனிதர்களின் அணுகுமுறைகள், வழிகாட்டும் நெறிகள் பிறர் எப்படிச் செயல்பட்டுச் சாதித்தார்கள் என்று தெரிந்துகொள்ள நமக்கு உதவும்.

 1. பரிவின் பரிமாணங்கள்

  .50.00

  No.of.Pages.96

  Size.Demi

  Author.அருள்பணி. குமார் ராஜா

  Size:Demi

  பரிவு அல்லது அன்பு எனப்படும் மாந்தநேயப் பண்பாட்டின் பல்வேறு வெளிப்பாடுகளை எளிய நடையில், செறிவான சிந்தனையில், திருவிவிலிய ஒளியில், இறையியல் பார்வையில், ஆழ்ந்த ஆன்மிக நெறியில், தேர்ந்த விளக்கத்தோடு தருகிறது இந்நூல்.

 1. வெற்றி தரும் ஆளுமைப் பண்புகள்

  .60.00

  No.of.Pages.112

  Size.Demi

  Author.டாக்டர் மெ. ஞானசேகர்

  Size:Demi

  வாழ்க்கைச் சம்பவங்கள், சில வரலாற்று, சமூக, அரசியல் நிகழ்வுகள், சில வாய்வழி மரபுகள், சில அறிவியல் உண்மைகள், சில கதைகள், சில தனிப்பட்ட அனுபவங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து, விவரித்து, அவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஆளுமைப் பண்புகளைப் பட்டியலிடுகிறது இந்நூல்.

 1. இயற்கை ஊற்று

  .25.00

  No.of.Pages.56

  Size.Crown (Reprint)

  Author.முனைவர் ச. மி. ஜான் கென்னடி, சே.ச.

  Size:Crown (Reprint)

  இயற்கையைச் சரியாக புரிந்துகொள்ளாத நிலையே பல பேரழிவுகளுக்குக் காரணம். இயற்கையின் ஆழப் பரிமாணத்தைப் புரிந்துகொள்ள பல அற்புதமான செய்திகளை இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது.

 1. தடுமாறும் இயற்கை

  .30.00

  No.of.Pages.64

  Size.Crown (Reprint)

  Author.முனைவர் ச. மி. ஜான் கென்னடி, சே.ச.

  Size:Crown (Reprint)

  நிலமும், நீரும், வளியும், வெளியும் மாசுபடுத்தப்பட்டு உயிர்கள் வாழ முடியாத பூமியாக மாறிக் கொண்டிருப்பதையும், பூமியின் வேதனைகளையும் சோதனைகளையும் விறுவிறுப்பாகக் கூறுகின்றது இந்நூல்.

 1. RECIPES FOR A FULLER LIFE

  .80.00

  No.of.Pages.152

  Size.Demi

  Author.Dr Sr. Lilly Thockanattu, SJL

  Size:Demi

  This book encapsulates personality development, motivation, psychology, interpersonal relationship, self-awareness, spirituality, etc. With a right blend of definition, narration, anecdotes, popular quotes and questions for thought, the author offers us an invitation to make our life meaningful and joyful.

 1. தாகம் கொள்வோம்

  .60.00

  No.of.Pages.112

  Size.Demi

  Author.அருள்பணி. முனைவர் பெ. குழந்தைசாமி

  Size:Demi

  தனிநபரின் ஆன்மிகத் தாகம்தான் பிறரது தாகம் தீர்க்கும் வழி என்பதை ஆழ்ந்துணர்ந்து, பல்வேறு கட்டுரைகள் மூலம் அந்தப் பயணத்திற்கு அழைப்பு விடுக்கிறார் நூலாசிரியர்.

 1. தண்ணீர் யாத்திரை

  .50.00

  No.of.Pages.104

  Size.Demi

  Author.அருள் துரை

  Size:Demi

  நீரின் சமூக, பொருளியல், அரசியல், பண்பாட்டுப் பரிமாணங்களை எடுத்துச்சொல்லி, தனிமனித அளவிலும், சமூக அளவிலும், அரசு அளவிலும், உலக அளவிலும் மானுடம் மேற்கொள்ள வேண்டிய தண்ணீர் யாத்திரைக்குத் தடம் பதிக்கிறது இந்நூல்.

 1. இரத்தத் திலகமிட்டு..!

  .30.00

  No.of.Pages.80

  Size.Demi (Reprint)

  Author.ஜெரி

  Size:Demi (Reprint)

  தவக்காலத்தின் வாடிக்கையான 15 நிலைகள் இல்லாமல், விவிலியப்பூர்வமான 15 நிலைகளைத் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்கிறது இந்நூல்.

 1. சின்னச் சின்ன சிந்தனைகள் பாகம் - 5

  .85.00

  No.of.Pages.168

  Size.Demi

  Author.ஜெ. மரிய அந்தோனி

  Size:Demi

  நாம் ஏற்கனவே அறிந்து வைத்திருக்கிற பல சிந்தனைகளைப் புரட்டிப்போடும் சிறப்புடனும், வாழ்வின் இலட்சியத்தைப் புரிந்துகொண்டு கூர்மைப்படுத்தவேண்டும் என்ற நல்லெண்ணத்துடனும் இந்த ஐந்தாம் பாகம் அமைந்துள்ளது.

 1. வெற்றிக்கான சிந்தனைகள்

  .20.00

  No.of.Pages.56

  Size.Crown

  Author.தங்கவேலு மாரிமுத்து, B.E., PGDBA

  Size:Crown

  வாழ்க்கையில் வெற்றிச் சிகரத்தை அடையத் தன்முயற்சியும், தன்னம்பிக்கையும், அகத்தேடலும், திசைவழியாக்கச் சிந்தனைகளும் அவசியம் என்பதை இந்நூல் எளிமையாக எடுத்துரைக்கிறது.

 1. வாழ்வில் வளம்பெற

  .75.00

  No.of.Pages.168

  Size.Demi (Reprint)

  Author.முனைவர் ச. இஞ்ஞாசிமுத்து, சே.ச.

  Size:Demi (Reprint)

  இளைய சமுதாயம் சிறகடித்து, இமயத்தைச் சிறைபிடிக்கத் தேவையான பல நல்ல கருத்துகளையும், நிகழ்வுகளையும், சிந்தனைகளையும் முறையாகச் செம்மைப்படுத்தித் தருகிறது இந்நூல்.

 1. சிரித்து வாழ்வோம்

  .20.00

  No.of.Pages.48

  Size.Crown (Reprint)

  Author.முனைவர் மி. நோயல்

  Size:Crown (Reprint)

  நம்முடைய வாழ்வை நிதானமாகவும், வளமையாகவும், மகிழ்ச்சியாகவும், நோயின்றியும் அமைத்துக்கொள்ள சிரிப்பு அவசியம். அதன் முக்கியத்துவத்தையும் மருத்துவப்பலனையும் தெளிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது.

 1. இந்திய விடுதலைப் போராட்டமும் கிறித்தவர்களும்

  .150

  No.of.Pages.288

  Size.Demi (Reprint)

  Author.முனைவர் எம். ஏ. சேவியர், சே.ச.

  Size:Demi (Reprint)

  இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட கிறித்தவச் சமூகத்தின் பங்களிப்பை துணிச்சலாக, ஆய்வுபூர்வமாக மீட்டெடுத்திருக்கிறது இந்நூல்.

 1. Grow with English

  .100.00

  No.of.Pages.156

  Size.Demi (Reprint)

  Author.M. Illanko Xavier, S.J. , Joseρhine Doss, SCB

  Size:Demi (Reprint)

  This book incorporates the best aspects of popularly known English books. It is a library of meticulous collection. It has space to add required information and is expandable. It serves as a reference book as well as a work-book. It covers alphabet to tongue twisters, theory to practical work, examples to exercise, etc.

 1. 150 செயல் தூண்டும் குட்டிக் கதைகள் (வரிசை 01)

  .140.00

  No.of.Pages.272

  Size.Demi (Reprint)

  Author.சேவியர் அந்தோனி, சே.ச.

  Size:Demi (Reprint)

  கதைகளைச் சேகரித்து அதற்குப் புது உயிரோட்டம் கொடுப்பது மட்டுமல்லாமல், புதிய கதைகளையும் உருவாக்கி மழுங்கிப்போன இளையோரின் சிந்தனைகளை உசுப்பிவிட்டு அதற்குப் புதிய திசையும் விசையும் தந்திருக்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு கதையின் முடிவிலும் அவர் கொடுக்கும் சிந்தனைச் சிதறல்கள் புதிதாகவும், உள்ளொளி தருவதாகவும், மாற்றத்திற்குத் தூண்டுகோலாகவும் இருப்பது இந்நூலின் சிறப்பாகும்.

 1. செந்நீர் காவியம்

  .90.00

  No.of.Pages.192

  Size.Demi (Reprint)

  Author.S. செல்வராஜ், சே.ச.

  Size:Demi (Reprint)

  புனித வாரத்தில் வரக்கூடிய வாசகங்கள், அதனைத் தொடரும் பதிலுரைப் பாடல்கள், வாசக முன்னுரைகள், வாசகங்கள், சிலுவைப் பாதைப் பாடல்கள், நீண்ட நற்செய்தி வாசகங்கள், பாரம்பரியமிக்க பழைய பாடல்கள், அருள்பணியாளர்கள் பயன்படுத்தக் கூடிய திருப்பலிப் பகுதிகள் அவர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்குகளைப் பற்றிய குறிப்புகள் என அத்தனையும் உள்ளடக்கியது இந்நூல்.

 1. தேர்வு உன் கையில்..!

  .30.00

  No.of.Pages.32

  Size.Crown (Reprint)

  Author.சேவியர் அந்தோனி, சே.ச.

  Size:Crown (Reprint)

  தேர்வுக்குத் தயாராகும் மாணவச் செல்வங்களுக்கு சித்திரங்களுடன் கூடிய தெளிவான கருத்துக்களை தொகுத்து வழங்கியுள்ளார் ஆசிரியர். இந்த ஒரு நூலிலேயே தமிழிலும், ஆங்கிலத்திலுமாக இரு மொழிகளிலும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன என்பது கூடுதல் சிறப்பு

 1. 150 செயல்தூண்டும் குட்டிக் கதைகள் (தொகுதி- 02)

  .150.00

  No.of.Pages.320

  Size.Demi (Reprint)

  Author.முனைவர் சேவியர் அந்தோனி, சே.ச.

  Size:Demi (Reprint)

  தனிமனித மற்றும் சமூக மாற்றத்திற்கான கருத்துக்களைத் தூவி உள்ளத்தில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன என்பதை இக்குட்டிக்கதைகள் விளக்குகின்றன.

 1. சாதனையாளர்கள் வாழ்வும் வாக்கும்

  .20.00

  No.of.Pages.56

  Size.Crown (Reprint)

  Author.டாக்டர். மெ. ஞானசேகர்

  Size:Crown (Reprint)

  உலகில் மனித குலம் இன்னும் சாதிக்க வேண்டிய சாதனைகள் ஏராளம் இருக்கின்றன. புதிய துறைகளில், புதிய சாதனையாளர்கள் உருவாக இந்நூல் ஓர் உந்துசக்தியாகும்.

 1. நல்லதொரு குடும்பம்

  .75.00

  No.of.Pages.138

  Size.Demi (Reprint)

  Author.அருட்பணி மிக்கேல் இருதயம், சே.ச.

  Size:Demi (Reprint)

  குடும்பவாழ்வின் சிறப்புகளையும், தமிழ் கலாச்சாரக் கூறுகளையும், இலக்கியத்தையும் விவிலியத்தோடு இணைத்துத் தருகிறது இந்நூல்.

 1. துடுப்பும் தூரிகையும்

  .70.00

  No.of.Pages.128

  Size.Demi (Reprint)

  Author.முனைவர் செ. வில்சன்

  Size:Demi (Reprint)

  தடைகளைத் தாண்டும் பக்குவம் பிறந்துவிட்டால், நம் எண்ணங்களுக்கு வண்ணம் தீட்ட துடுப்பும் தூரிகையாக மாறிவிடும். இத்தகைய தன்னம்பிக்கைச் சிந்தனைகளை 25 கட்டுரைகளில் பல்வேறு எடுத்துக்காட்டுகளோடு அள்ளித் தருகிறது இந்நூல்.

 1. என்னையே தேடும் நான்

  .90.00

  No.of.Pages.176

  Size.Demi (Reprint)

  Author.அருள்திரு. முனைவர். ம. அருள்

  Size:Demi (Reprint)

  பல்வேறு உளவியல் கோட்பாடுகளை எளிய எடுத்துக்காட்டுகளோடு சமூக அக்கறையோடு, ஆற்றுப்படுத்தும் பாங்கோடு, அனுபவ முதிர்ச்சியோடு முன்வைத்து, அகத் தேடலுக்குத் தூண்டும் நூல்.

 1. நேசமே நிறைவு

  .45.00

  No.of.Pages.112

  Size.Demi (Reprint)

  Author.ச. ஜெகநாதன்

  Size:Demi (Reprint)

  பெருமூச்சு விடுவதே வாழ்வின் நிறைவாகக் கருதும் மனிதர்களுக்கு நேசத்தை நிறைவாகப் பார்க்க ஓர் அழைப்பு இது. சில வரலாற்று உண்மைகள், நேரடி அனுபவங்கள், இறையியல் விளக்கங்கள், சில கேள்விகளுக்கான பதில்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, ஒவ்வொரு தலைப்பின் கீழும் சிந்தனைக்குச் சில வரிகளும் உணர்வுபூர்மான இறைவேண்டல்களும் அமைந்திருப்பது இந்நூலின் சிறப்பு.

 1. சின்னச் சின்ன சிந்தனைகள்- பாகம் - 1

  .65.00

  No.of.Pages.112

  Size.Demi(Reprint)

  Author.ஜெ. மரிய அந்தோணி

  Size:Demi(Reprint)

  நம்மையும் நம் எண்ணங்களையும் பரிசோதித்து தெளிவுபடுத்த, நம்மை நாமே பரிசோதித்து, புடமிட்டு, சுயஆய்வு செய்து, சீர்படுத்திக்கொள்ள இந்தச் சிந்தனைகள் பெரிதும் உதவும்!

 1. அ...ஆ...இ...ஈ திசைக்காட்ட வரும் குழந்தைகள் இறையியல்

  .160.00

  No.of.Pages.384

  Size.Demi (Reprint)

  Author.ஆரோக்கிய ஆன்றோ

  Size:Demi (Reprint)

  குழந்தைகளின் உலகத்தில், குழந்தைகளின் மொழியில், குழந்தைகளின் புலன்களில், குழந்தைகளின் அனுபவத்தில் உருவாக வேண்டிய குழந்தைகள் இறையியலுக்கு முதல் புள்ளியைத் தொட்டு வத்திருக்கிறது இந்நூல் ! குழந்தைகள் குறித்த ஓர் ஆழமான, பரந்துபட்ட இறையியலாக்கம் இது !

 1. Yes! You Can Master English

  .65.00

  No.of.Pages.72

  Size.Demi

  Author.Fr.Albert Joseph, S.J.

  Size:Demi

  Inside… Parts of speech, List of useful verbs/modals, Tenses with tamil meaning, Yes or No type questions & answers, Active voice and passive voice, Degrees of comparison, Sentence pattern, Question tags, Direct and indirect speech, Conversation, List of vocabulary.

 1. மனம் ஒரு மர்மப் பெட்டகம்

  .70.00

  No.of.Pages.112

  Size.Demi (Reprint)

  Author.மி. ஜெயராஜ், சே.ச.

  Size:Demi (Reprint)

  பொதுவாக, மனம் என்று சொன்னாலே அது தனிமனிதர் சார்ந்ததாகவே அறியப்படுகிறது. ஆனால், குழு மனம், சமூக மனம் என்று விரித்துப் பார்க்க வேண்டிய தேவையை இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. உளவியல் என்றாலே, கோட்பாடுகளாக இருக்கும் என்ற பார்வையிலிருந்து விலகி, ஒரு நெடுங்கதைக்குள் கதாப்பாத்திரங்களாகப் பயணிப்பது இந்நூலின் சிறப்பு! பொருளியல், அரசியல், சாதியம், பண்பாடு என்ற சமூகச் சூழலுக்குள் உளவியலை உற்றுநோக்கியிருப்பது ஒரு புதிய அனுபவம். -

 1. சிந்திக்க சில குட்டிக் கதைகள்

  .120

  No.of.Pages.272

  Size.Demi (Reprint)

  Author.சேவியர் அந்தோனி, சே.ச.

  Size:Demi (Reprint)

  பெயர்தான் குட்டிக்கதைகள்.. அவற்றிற்குள் பொதிந்துகிடக்கும் சிலிர்க்க வைக்கும் சிந்தனைகளும், கருத்தைக் குடையும் கேள்விகளும், மாறாத சுவையு,ம் மாற்று எண்ணங்களும், மூக்கைத் துளைக்கும் மண்வாசனையும், புன்னகைக்க வைக்கும் ஓவியங்களும் என வியப்பில் ஆழ்த்தியுள்ளார் இந்நூலின் ஆசிரியர்.

 1. வாழ்வை வளமாக்கும் திறமைகளும் பண்புகளும் - 2

  .75.00

  No.of.Pages.104

  Size.Demi (Reptint)

  Author.முனைவர் ச.இஞ்ஞாசிமுத்து, சே.ச.

  Size:Demi (Reptint)

  அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதை உள்ளுணர்வு என்றால், வளமான வாழ்வை அமைத்துக்கொள்வதை மனிதத் திறன் எனக்கொள்ளலாம். இந்த அடிப்படையில், வளமாக மிளிர - உறுதியாக நிலைக்க - சீராக வளர என்று மூன்று கருத்தோட்டங்களை நூலின் முதல் பாகமும், தழைத்து உயர - சரியாக முயல - விரிந்து மலர –- சிறப்பாக வெல்ல என்று நான்கு கருத்தோட்டங்களை நூலின் இரண்டாம் பாகமும் முன்வைக்கின்றன. சிறிய நூலாகத் தென்பட்டாலும், ஒரே மூச்சில் வாசித்து முடிக்கிற நூல் அல்ல இது. ஒவ்வொரு வாக்கியமாக, தியானிப்பதுபோல மெல்ல மெல்ல அசைபோட்டு, நம் வாழ்வோடு உரசிப்பார்த்தால்தான் இந்நூலின் சுவையை, பலனை அறிய ம