இந்த உலகில் மாமனிதர்கள் விட்டு செல்கின்ற செய்தி ஒன்றுதான்.மனமிருந்தால் வாழ்க்கையுண்டு. இந்த ஒற்றை கருவை அடிப்படையாக கொண்டு ஐம்பது நிகழ்வுகளை தொகுத்து தந்து வாசகர்களிடம் நம்பிக்கையை விதைக்கிறார் இந்நூலாசிரியர்.
மறைசாட்சியார், நம்பிக்கை சாட்சியார், மறைவல்லுனர்கள், தவமுனிவர்கள், அறப்பணி ஆற்றியோர், ஐந்து காயம் வரம் பெற்றோர், திருவுடல் அழியாதோர், இளம் புனிதர்கள் என்று வற்றாத நீரூற்று போல பொங்கி வழியும் புனிதர்களின் கருவூலத்தை வியக்கத்தக்க நூறு தகவல்களாக தந்திருக்கிறார் ஆசிரியர்.
ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில் இலட்சியம் மிகவும் அவசியம். இலட்சியமில்லா வாழ்க்கையும்,பயணமும் கடிவாளம் இல்லாத குதிரைப் போன்றவை. நமக்கான இலக்கு குறித்து சிந்திக்கவும் இலட்சியங்களை சுவாசிக்கவும் இந்நூலின் வழியாக அழைப்பு விடுத்துள்ளார் ஆசிரியர்.
திருஅவையின் எதிர்கால தூண்களாய் விளங்கும் இளையோரை இலக்காக கொண்டு திருவிவிலிய விழுமியங்களை உள்ளீடாக்கி தனது நீண்டகால ஊடகப்பணி சமுகப்பணி அனுபவங்களில் தோய்ந்து இறையாட்சி இலட்சியத்தை முன்னிறுத்தி சமூக அக்கறையோடு அமைந்திருக்கிறது இந்நூல்.
பழைமையோ புதுமையோ அந்தக் காலமோ இந்தக் காலமோ அன்பென்ற அச்சாணியில்தான் மானுடம் இயங்க முடியும் என்பதை உரத்துச் சொல்கிறது அன்பென்ற மழையிலே என்ற இந்நூல்.
உலக அளவில் நமக்கு முன்பாக வாழ்ந்து சாதித்தவர்கள் பல்வேறு வெற்றி சூத்திரங்களை நிகழ்வுகளாக, கதைகளாக, வரலாறாக தொகுத்து தந்துள்ளது இந்நூல்.
தூங்கி கொண்டிருப்பவரை நல்வாய்ப்பு தட்டி எழுப்புவதில்லை. உழைப்பும் முயற்சியுமே இந்த மானுடத்தை இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது. இதைத்தான் முயன்றால் முடியும் என்ற சிற்றேடு தலைப்பாகவும் உள்ளடக்கமாகவும் கொண்டுள்ளது.
Subscribe to our website mailling list and get a Offer, Just for you!
Sed ut perspiciatis, unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium