எல் சால்வதோர் மண்ணில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு, இரத்தமும் சதையுமாய் கிழிந்துதொங்குவதை சொற்களால் படம்பிடிக்கிறது..... ஜான் சொப்ரினோவின் உணர்வுப்பூர்வமான, இறையியல்பூர்வமான, அறிவியல்பூர்வமான இப்படைப்பு உயிர்ப்பின் திசையை நமக்குக் காட்டுகிறது... மக்கள் பிரச்சனைகளோடு பின்னிப்பிணைந்த, சமூக-பொருளாதார-பண்பாட்டு-அரசியலை அறிவுப்பூர்மாகவும் இதயப்பூர்வமாகவும் உரசுகின்ற உயர்கல்வியையும் பல்கலைக்கழகத்தையும் கண்முன் நிறுத்துகிறது.... குருத்துவ வகுப்பறைகளில் உச்சரிக்கப்படும் இறையியல் மண்ணின் மணத்தோடும் புழுதியின் புதல்வர்களோடும் விடுதலை இறையியலாய் புரண்டுகிடப்பதை தமிழில் பதிவுசெய்கிறது.
அன்பே சமய வாழ்வின் பாதையென்று, நல்லதொரு வழிகாட்டி அமைந்துவிட்டால் எத்தகு பாதையையும் எளிதில் கடந்திடலாம். அத்தகு வகையில் நம் கையைத் தேடிவந்த நம்பிக்கைப் பயணத்தின் நல்லதோர் வழிகாட்டி இந்நூல்.
In this book the author spoke of the various dimensions of prayer in a simple, heart warming way, reinforcing his views with psychological insights and apt illustrations and quotations and concluded what he had to say with an appropriate prayer.
உலகில் காணப்படும் கல்லாமை, இல்லாமை, இயலாமை, அறியாமை அனைத்தும் ஒழிய நல்லுணர்வுப் பார்வை அவசியம். இப்பார்வை இப்பூவுலகு முழுவதும் பரவ வேண்டும். இத்தகைய நல்லுணர்வைத் தருவதுதான் இந்நூல். மனித உணர்வுகளையும் மனித மனங்களையும் ஆழமாகத் தொடுகின்ற சிந்தனைகள் இந்நூலில் அடங்கியுள்ளன.
ஆன்மிக வாழ்வின் வளர்ச்சிக்காக நாம் மேற்கொள்ளும் திருவருட்சாதனங்கள், சேவை, தியானம் போன்ற ஆன்மப் பயிற்சிகளுடன் இயேசுவின் பெயரை மந்திரமாகச் சொல்லும் பழக்கத்தை இந்தியக் கிறிஸ்தவர்கள் ஏற்படுத்திக் கொண்டால் இந்தியத் திருச்சபையின் ஆன்மிகம் மறுமலர்ச்சி அடையும். இத்தகைய மறுமலர்ச்சிக்கு உதவியாகத்தான் இச்சிறுநூல் வெளியாகிறது.
Subscribe to our website mailling list and get a Offer, Just for you!
Sed ut perspiciatis, unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium