நிலமும் நீரும் வளியும் வெளியும் மாசுபடுத்தப்பட்டு உயிர்கள் வாழ முடியாத பூமியாக மாறிக் கொண்டிருப்பதையும், பூமியின் வேதனைகளையும் சோதனைகளையும் விறுவிறுப்பாகக் கூறுகின்றது இந்நூல்.
எளிய நடை, இனிய சொற்கள், சுகமான அனுபவங்கள், சுவையான கதைகள், பொருத்தமான மேற்கோள்கள் போன்றவை இந்நூலின் சிறப்பு. இந்நூலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் கருத்துரையாளர்கள் பயன்படுத்தலாம். இதிலுள்ள கருத்துகளைப் பல முறை படித்து அதனை உள்வாங்கித் தாங்களும் பிறரும் வளரலாம். இது ஒரு தகவல் களஞ்சியம் மட்டுமன்று; மாறாக, வாழ்க்கைக் களஞ்சியம். எனவே நமது வாழ்வைச் சிறப்பாக வாழ்ந்திட சின்னச் சின்ன சிந்தனைகளை உற்சாகத்துடன் படித்து மகிழ்வோம்.
Nil
மனிதரின் வாழ்வில் வருகின்ற பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டுமென்றால் தீர்க்கமான சிந்தனையும், உறுதியான மனநிலையும் அவசியமானது. நற்சிந்தனைகளால் நிரம்பியிருக்கும் மனிதன் மனச்சிதைவுக்கும் மனவிரக்திக்கும் எளிதில் ஆளாவதில்லை. இந்நூலில் உள்ள சிந்தனைகள் நம் உள்ள வளர்ச்சிக்கு மட்டுமல்ல, நம் ஆன்மிக மலர்ச்சிக்கும் உதவும் என்பதில் ஐயமில்லை.
This is a course book for students who are in need of Basic English for day-to-day use. The emphasis on interaction and creative thinking through activities would help teachers engage their students meaningfully in language classrooms.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட கிறித்தவச் சமூகத்தின் பங்களிப்பைத் துணிச்சலாக, ஆய்வுபூர்வமாக மீட்டெடுத்திருக்கிறது இந்நூல்.
சாதித்தவர்களின் சரித்திரங்களை நறுக்கென்று சுட்டிக்காட்டியிருக்கிறார் ஆசிரியர். சாதிக்கத் துடிக்கும் பலரைச் சரித்திர நாயகர்களாக மாற்றவும் பிறரைச் சாதிக்கத் தூண்டவும் உறுதுணையாக அமையும் தகவல்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
தடைகளைத் தாண்டும் பக்குவம் பிறந்துவிட்டால், நம் எண்ணங்களுக்கு வண்ணம் தீட்ட துடுப்பும் தூரிகையாக மாறிவிடும். இத்தகைய தன்னம்பிக்கைச் சிந்தனைகளை 25 கட்டுரைகளில் பல்வேறு எடுத்துக்காட்டுகளோடு அள்ளித் தருகிறது இந்நூல்.
அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதை உள்ளுணர்வு என்றால், வளமான வாழ்வை அமைத்துக்கொள்வதை மனிதத் திறன் எனக்கொள்ளலாம். இந்த அடிப்படையில், வளமாக மிளிர - உறுதியாக நிலைக்க - சீராக வளர என்று மூன்று கருத்தோட்டங்களை நூலின் முதல் பாகமும், தழைத்து உயர - சரியாக முயல - விரிந்து மலர –- சிறப்பாக வெல்ல என்று நான்கு கருத்தோட்டங்களை நூலின் இரண்டாம் பாகமும் முன்வைக்கின்றன. சிறிய நூலாகத் தென்பட்டாலும், ஒரே மூச்சில் வாசித்து முடிக்கிற நூல் அல்ல இது. ஒவ்வொரு வாக்கியமாக, தியானிப்பதுபோல மெல்ல மெல்ல அசைபோட்டு, நம் வாழ்வோடு உரசிப்பார்த்தால்தான் இந்நூலின் சுவையை, பலனை அறிய இயலும்.
குழு மனம், சமூக மனம் என்று விரித்துப் பார்க்க வேண்டிய தேவையை இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. உளவியல் என்றாலே, கோட்பாடுகளாக இருக்கும் என்ற பார்வையிலிருந்து விலகி, ஒரு நெடுங்கதைக்குள் கதாப்பாத்திரங்களாகப் பயணிப்பது இந்நூலின் சிறப்பு! பொருளியல், அரசியல், சாதியம், பண்பாடு என்ற சமூகச் சூழலுக்குள் உளவியலை உற்றுநோக்கியிருப்பது ஒரு புதிய அனுபவம்.
Subscribe to our website mailling list and get a Offer, Just for you!
Sed ut perspiciatis, unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium