தூரத்தில் உள்ளதை அருகில் கொண்டுவந்து நிறுத்துவதேஉபதேசம் என்று சொல்லப்படுவது. அதாவது சில ஆழமான மறையுண்மைகள் மற்றும் வாழ்வியல் சிந்தனைகள் எல்லா மக்களுக்கும் எளிதில் கிடைத்துவிடுவதில
இயேசுவை அறியாதவர்கள் இயேசுவை முழுமையாகப் புரிந்துகொள்ளவும், இயேசுவைப் பற்றித் தவறாகப் புரிந்துகொண்டவர்கள் தங்கள் புரிந்துணர்வைத் திருத்திக்கொள்ளவும், இயேசுவை ஓரளவு புரிந்தவர்கள் இன்னும் இயேசுவை ஆழமாகப் புரிந்துகொள்ளவும் இந்நூல் சிறந்த ஒளிகாட்டி. இயேசுவை வழிபடுவதில் மட்டும் ஆர்வம் காட்டிவிடாமல், இயேசுவின் இலட்சியப் பாதையில் வழிநடக்க உதவும் வழிகாட்டி.
ஒரு மனிதரை மனிதராகப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடியாக இருப்பது அவர் கொண்டிருக்கும் நற்பண்புகள், மதிப்பீடுகள், இலட்சியக் கனவுகள், உயர்ந்த எண்ணங்கள் போன்றவையாகும். ஒரு மாணவரின் அறிவாற்றலை விட அவரிடம் இருக்கவேண்டிய மனித நற்பண்புகளே அவரைச் சிறந்த மனிதராக உலகிற்குக் காட்டும் என்ற சித்தாந்தத்தை வலியுறுத்தியிருப்பது இந்நூலின் சிறப்பு.
அன்னை தெரசா இந்திய தேசத்திற்கு இறைவன் வழங்கிய அற்புதமான பரிசு. ஹிந்தியாவின் தவப்புதல்வி என்று போற்றப்பட்டவர். “நீ என்னவாக இருக்கிறாயோ அது இறைவன் உனக்குக் கொடுத்த கொடை. நீ என்னவாக மாறுகிறாயோ அது இறைவனுக்கு நீ கொடுக்கும் கொடை” என்பது அவரது கருத்து. அன்னை தெரசா அவர்களைத் தான் சந்தித்தபோது ஏற்பட்ட இனிமையான அனுபவங்கள் அனைத்தையும் தொகுத்து வழங்கியுள்ளார் ஆசிரியர்.
Subscribe to our website mailling list and get a Offer, Just for you!
Sed ut perspiciatis, unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium